ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆறுதல் வெற்றியா? வெயிட் வாஷா? வங்கதேசத்துடன் கடைசி ஒரு நாள் போட்டியில் மோதும் இந்தியா

ஆறுதல் வெற்றியா? வெயிட் வாஷா? வங்கதேசத்துடன் கடைசி ஒரு நாள் போட்டியில் மோதும் இந்தியா

Ind vs Ban

Ind vs Ban

Ind vs Ban | இந்தியாவின் சார்பில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தீபக் சாகர், குல்தீப் சென் ஆகியோர் விலகினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று, தொடரை வசப்படுத்தியது. இதையடுத்து, மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் இன்று பகல் 11.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவின் சார்பில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தீபக் சாகர், குல்தீப் சென் ஆகியோர் விலகினர். இதனால், இன்றைய போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. முந்தைய போட்டிகளில் ஷிகர் தவன், விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பினர். மேலும், பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் சொல்லிக்கொள்ளும் படி யாரும் தங்களது திறமையை வெளிப்படுத்தவில்லை.

Also Read : மகளிர் கிரிக்கெட் : முதல் டி20 போட்டியில் இந்தியாவை 9 விக். வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா

இதை, சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வங்கதேசம், சொந்த மண்ணில் ஜொலித்தது. இந்நிலையில், கடைசிப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், வங்கதேச அணி மீண்டும் அதிர்ச்சியளிக்க காத்திருக்கிறது. எனவே, சம்பிரதாய போட்டி என்பதையும் கடந்து இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Ind vs Ban