ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்… 15 வீரர்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம்

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்… 15 வீரர்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம்

வங்கதேச கிரிக்கெட் அணி

வங்கதேச கிரிக்கெட் அணி

உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின், இறுதி போட்டியில் பங்கேற்க இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டியது அவசியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடக்கூடிய 15 வீரர்கள் கொண்ட பட்டியலை, வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் சிறிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து இந்தியாவுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி, நாளை மறுதினம் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் வங்கதேச வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்டில் படுதோல்வி… அதிருப்தியை வெளிப்படுத்திய பாக். கேப்டன்

இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், 1-1 என்ற கணக்கில் அந்த அணி தொடரை சமன் செய்து விடும். அதேநேரம் உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின், இறுதி போட்டியில் பங்கேற்பதற்கு, வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் 2ஆவது டெஸ்டில் விளையாடக்கூடிய வங்கதேச அணி வீரர்கள் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டியில் முக்கிய ஆட்டக்காரரான தமிம் இக்பால் காயம் காரணமாக இடம் பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி வீரர்கள் பட்டியல்-

மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக், யாசிர் அலி, முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, கலீத் அகமது, ஜாகிர் ரஹ்மான், ராஜா நாசூம் அகமது.

‘பாக். கேப்டன் பாபர் ஆசம் ஒரு ஜீரோ… அவரை கோலியுடன் ஒப்பிடாதீர்கள்’ – முன்னாள் வீரர் கடும் விமர்சனம்…

இதற்கிடையே இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2ஆவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காயத்தால் அவதிப்படும் இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Bangladesh, Cricket