ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மீண்டும் பெரிய பார்ட்னர்ஷிப்.. மெஹதி - மஹ்முதுல்லாஹ் அபாரம்... இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு

மீண்டும் பெரிய பார்ட்னர்ஷிப்.. மெஹதி - மஹ்முதுல்லாஹ் அபாரம்... இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு

Ind vs Ban

Ind vs Ban

Ind vs Ban | இந்திய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் ஒரு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்து. இதையடுத்து 2வது ஒரு நாள் போட்டி இன்று டாக்கா மைதானத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அந்த அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஆனால் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பான பார்டனர்ஷிப்பை அணியில் சரிவில் இருந்து மீட்டனர். இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இருவரும் அரைசதம் கடந்தனர்.

மஹ்முதுல்லாஹ் 77 ரன்கள் எடுத்திருந்த போது உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அவுட்டானார்.  மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 148 ரன்கள் பார்டனர்ஷிப் அதைத்தனர். மற்றொரு சிறப்பாக விளையாடிய மெஹதி இறுதி ஓவர்களில் அதிரடி காட்டினார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. ஹெதி 100 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

First published:

Tags: Ind vs Ban Live Score