நாளை தொடங்கவுள்ள இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் இடத்தின் வானிலை, பிட்ச் ரிப்போர்ட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.
வங்கதேசத்தின் சட்டோக்ராம் நகரில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது.
பலமான இந்திய அணி வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்காக கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி இந்தப் போட்டியில் களம் இறங்கும்.
உள்ளூரில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற வங்கதேசம் தீவிரம் காட்டும் என்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லுமா இந்தியா? வங்கதேச டெஸ்ட் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, முகம்மது ஷமி, ரவிந்திரா ஜடேஜா, பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெறாதது எதிர்அணிக்கு சாதகமாக அமையலாம். வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு கோலி பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசம் தரப்பில் மெகிதி ஹசன், ஷகிப் அல் ஹசன் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை, மழை பெய்வதற்கு 2 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. இது முதல் நாளுக்கான வானிலையாகும். அடுத்த ஒரு வாரத்திற்கும் மழை பெய்வதற்கான வாய்ப்பு போட்டி நடைபெறும் சட்டோக்ராமில் இல்லை.
இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியை நேரலையாக எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…
பிட்ச் ரிப்போர்ட்டை பொருத்தளவில் இந்த மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக கருதப்படுகிறது. இதனால் ரன்குவிப்பு அதிகம் இருக்கலாம். இதேபோன்று சுழற்பந்து வீச்சுக்கு இந்த மைதானம் சாதகமாக இருக்கும். இதனால் அஷ்வின், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் களத்தில் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச அணி –
கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்
வங்கதேசம் உத்தேச அணி –
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, அனாமுல் ஹக், மொமினுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், தைஜுல் இஸ்லாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Bangladesh