வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஓபனிங் இறங்கி பவுண்டரிகளை பறக்கவிட்ட இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் வங்கசேத அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியல் இந்திய அணி ஆறுதல் வெற்றியடையுமா என்ற எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இஷான் கிஷான் இரட்டை சதமடித்து டபுள் ட்ரீட் கொடுத்துள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ஓபனிங் வீரராக இஷான் கிஷான் களமிறங்கினார். ஷிகார் தவான் 3 ரன்களில் அவுட்டாகி வெளியேற அடுத்த வந்த விராட் கோலி உடன் பாரட்னர்ஷிப் அமைத்த இஷான் கிஷான் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இஷான் கிஷான் அரைசதம் அடித்த கையோடு வேகம் எடுக்க ஆரம்பித்தார்.
டாப் கியரில் சென்ற இஷான் கிஷான் டி20 போட்டியில் விளையாடுவது போன்று அதிரடி காட்டினார். இஷானின் அதிரடியால் பந்துகள் அந்தரத்திலேயே பயணித்து கொண்டிருந்தது. அம்பயர் பவுண்டரிகளுக்கு கையசைத்தும் சிக்ஸர்களுக்கு கைகளை தூக்கியுமே களைத்துவிட்டனர். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 85 பந்துகளில் முதல் சதத்தை பதிவு செய்த கையோடு தனது அதிரடியை சற்றும் குறைக்காமல் விளையாடினார் இஷான் கிஷான்.
126 பந்துகளில் 23 பவுண்டரி, 9 சிக்ஸரகளுடன் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இளம் வயதில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய இளம் வீரர் என்ற சாதனை இஷான் கிஷான் படைத்துள்ளார். குறைந்த பந்துகளில் இரட்டை சதமடித்த கிறிஸ் கெய்ல் சாதனையும் இஷான் உடைத்துள்ளார். கெய்ல் 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்த நிலையில் இஷான் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இஷான் கிஷான் இறுதியாக 210 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸருக்கு தூக்கி அடிக்க முயன்று பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் இஷானின் சிறப்பான ஆட்டம் முடிவுக்கு வந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs Ban