#INDvsAUS | இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடக்கம்

India vs Australia | ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Web Desk | news18
Updated: January 12, 2019, 9:41 AM IST
#INDvsAUS | இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடக்கம்
இந்திய அணியினர்- கேப்டன் விராட் கோலி
Web Desk | news18
Updated: January 12, 2019, 9:41 AM IST
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, சிட்னி நகரில் இன்று தொடங்குகிறது. இதனிடையே, பெண்களை தரக்குறைவாக விமர்சித்த இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இருபது ஓவர் தொடரை சமன் செய்த நிலையில், முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடர் இன்று சிட்னி நகரில் தொடங்குகிறது.

ஹர்திக் பாண்ட்யா


இந்திய அணியைப் பொறுத்தவரை டெஸ்ட் தொடரில் கலக்கிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் உலகக்கோப்பை போட்டி தொடங்கவுள்ள நிலையில் தோனி எவ்வாறு விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 1980 ஆண்டுகளில் அணிந்து விளையாடிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது.

Also see... வைரலாகும் தோனியின் பேட்ட ட்ரெய்லர் வீடியோ!
Loading...
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...