முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மேட்ச்சில் இந்திய அணி போராடி தோல்வி… தொடரையும் இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மேட்ச்சில் இந்திய அணி போராடி தோல்வி… தொடரையும் இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி

7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல் வி அடைந்தது.

7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல் வி அடைந்தது.

கடைசி 2 ஓவரில் 38 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, இந்திய வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பையில் இன்று நடந்த பரபரப்பான டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. தொடரையும் இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகள் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே நடந்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 4ஆவது போட்டி மும்பையின் ப்ராபோன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்ரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஹீலி மற்றும் விக்கெட் கீப்பர் மூனி களத்தில் இறங்கினர். மூனி 2 ரன்களில் வெளியேற அடுத்து வந்த தஹிலாமெக்ராத் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IPL 2023 AUCTION : ஐ.பி.எல். ஏலத்தில் 3 வீரர்களை குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

இதன்பின்னர் கேப்டன் ஹீலி ரிட்டையர் ஹர்ட் முறையில் களத்தைவிட்டு வெளியேறினார். அடுத்ததாக இணைந்த கார்ட்னர் – பெர்ரி இணை இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. கார்ட்னர் 27 பந்துகளில் 42 ரன்களும், பெர்ரி 42 பந்துகளில் 72 ரன்களையும் அதிரடியாக சேர்த்தனர்.

கிரேஸ் ஹாரிஸ் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். 20  ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். ஸ்மிருதி 16 ரன்னிலும், ஷபாலி 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்களில் வெளியேற, அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை : 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை

பின்னர்வந்த தேவிகா வைத்யா 26 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். 18 ஓவர் முடிவில் இந்தியா5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்திருந்தது.

கடைசி 2 ஓவரில் 38 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, இந்திய வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையை ஏற்படுத்தினர். இறுதியில் 181 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்டதொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

First published:

Tags: Indian women cricket