டெல்லி டெஸ்ட் போட்டியில் அக்சர் படேலின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு இணையாக முதல் இன்னிங்ஸில் ரன்களை சேர்த்துளளது. அக்சர் படேல் அரைச்சதம் அடிக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கம் 72 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் 32 ரன்னிலும், ராகுல் 17 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த புஜாரா ரன் ஏம் எடுக்காமலும், கோலி 44 ரன்னிலும் ஆட்டடிமழந்தனர். ரவிந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார். 139 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி இருந்தபோது அஷ்வின் – அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.
அஷ்வின் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைச்சதம் கடந்த அக்சர் படேல் 74 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். இருவரும் 8ஆவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 83.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழநத இந்திய அணி 262 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 1 ரன் முன்னிலை பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. இன்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. 2ஆவது இன்னிங்ஸில் தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 61 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நாளை 3ஆம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket