ஆஸி.யை அடக்க காத்திருக்கும் கோலி: மேத்யூ ஹெய்டன் எச்சரிக்கை!

#ViratKohli vs #JhyeRichardson contest: #MatthewHayden Answers | இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. #INDvAUS

ஆஸி.யை அடக்க காத்திருக்கும் கோலி: மேத்யூ ஹெய்டன் எச்சரிக்கை!
விராட் கோலி. (BCCI)
  • News18
  • Last Updated: February 19, 2019, 2:19 PM IST
  • Share this:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை ஒரு கை பார்க்க காத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு மண்ணில் முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்தது.

team india, இந்திய அணி
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)இந்த தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன், அவரது அணி சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக இருந்தார். ஒட்டுமொத்தமாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஆனால், ஒரு நாள் தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு, ரிச்சர்ட்சன் மிகுந்த அச்சுறுத்தலாக இருந்தார். 3 ஒரு நாள் போட்டிகளிலும் கோலியின் விக்கெட்டை ரிச்சர்ட்சன் வீழ்த்தினார்.

Virat-Kohli, விராட் கோலி
ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (AP)
2019 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறுகையில், “அண்மையில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் ரிச்சர்ட்சனுக்கு எதிராக கோலி சில சிக்கல்களை சந்தித்தார். 3 முறையும் கோலி விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆனால், இந்த முறை நிச்சயமாக சில வித்தியாசங்கள் உண்டு. ரிச்சர்ட்சனுக்கு போதிய அனுபவம் இல்லை. இந்தியாவில் தொடர் நடைபெறுவதால் கோலி ஆதிக்கம் செலுத்துவார் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

Matthew Hayden, மேத்யூ ஹெய்டன்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன்.


மேலும், “துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு, பந்து வீச்சாளர் ஜேசன் பெக்ரண்டிராப் கடும் போட்டி இருக்கும். இது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்,” என்று மேத்யூ ஹெய்டன் கூறினார்.

Video: மெஸ்சியாக மாறிய ‘தல’ தோனி.. போட்டியைக்காண குவிந்த ரசிகர்கள்..!

Also Watch...

First published: February 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்