Home /News /sports /

வரலாறு படைப்பதை ஊக்குவிக்கப் போவதில்லை: விராட் கோலி!

வரலாறு படைப்பதை ஊக்குவிக்கப் போவதில்லை: விராட் கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (AFP)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (AFP)

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

  • News18
  • Last Updated :
    “சிட்னி டெஸ்டில் வரலாறு படைப்பதை நான் ஊக்குவிக்கப் போவதில்லை” என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

    Indian Test Team, இந்திய வீரர்கள்
    வெற்றியைக் கொண்டாடும் இந்திய வீரர்கள். (BCCI)


    ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி என பெருமையை விராட் கோலி தலைமையிலான அணி பெற்றது. பெர்த் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    Indian Cricket Team, இந்திய டெஸ்ட் அணி
    இந்திய டெஸ்ட் அணி. (BCCI)


    4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 37 ஆண்டுகளுக்குப் பின், மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசிப் போட்டி சிட்னியில் நாளை (ஜன. 3) தொடங்குகிறது.Indian Team, கோலி

    வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கோலி. (BCCI)கடைசிப் போட்டி குறித்து கேப்டன் கோலி கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதை கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் புரிந்துகொண்டோம். மைதானத்தில் பேட்டிங் செய்யும்போது 40ஆயிரம் மக்கள் உங்களது விக்கெட்டை எதிர்பார்த்து இருப்பார்கள். நீங்கள் ஒரு அணிக்கு எதிராக விளையாடவில்லை, ஒரு நாட்டுக்கு எதிராக விளையாடுகிறீர்கள். அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு நாங்கள் இங்கே வெற்றி பெற விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

    Virat Kohli Practice
    வலைப்பயிற்சி  மேற்கொள்ள வந்த கேப்டன் விராட் கோலி (Image:AFP)


    மேலும், “வரலாறு படைப்பதற்காக எந்த விளையாட்டு வீரரும் களமிறங்குவதில்லை. தங்களுக்கு முன் இருக்கும் தடைகளைத் தாண்டுவதே எங்களுடைய நோக்கம்” என்று கூறினார்.

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Captain Virat Kohli, Ind Vs Aus, India vs Australia, Sydney

    அடுத்த செய்தி