Home /News /sports /

வந்த வேலை இன்னும் முடியவில்லை: கேப்டன் கோலி

வந்த வேலை இன்னும் முடியவில்லை: கேப்டன் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (AFP)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (AFP)

Kohli: Job not Done Yet, Have to be Prepared for Sydney | 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 2-1 என முன்னிலையில் வகிக்கிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலி, தங்களுடைய வேலை இன்னும் முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    Bumrah, பும்ரா
    மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவை கை தட்டி பாராட்டும் இந்திய வீரர்கள். (Twitter)


    ஆஸி.க்கு ‘பலோ ஆன்’ கொடுக்காமல் 296 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 4-ம் நாள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.

    Indian Team Pacers, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்
    இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா. (Twitter)


    பேட் கம்மின்ஸ் 61 ரன்களுடனும், நாதன் லியோன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதும், கூடுதலாக 3 ரன்கள் மட்டும் சேர்த்து அந்த அணி 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலையில் வகிக்கிறது.

    Virat Kohli, விராட் கோலி
    மெல்போர்ன் மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடும் கேப்டன் விராட் கோலி. (BCCI)


    போட்டி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து கேப்டன் விராட் கோலி, “மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றது எங்களது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. நாங்கள் வென்ற இரு போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என நினைக்கிறேன், ஆனால், எங்களுடைய வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை. சிட்னியில் நடைபெறும் கடைசிப் போட்டிக்கு தயாராக வேண்டும்” என்று கூறினார்.

    #AUSvIND இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Ind Vs Aus, India vs Australia 2018, Virat Kohli

    அடுத்த செய்தி