Home /News /sports /

கோலியை விமர்சித்த ஜான்சனுக்கு நெட்டிசன்கள் பதிலடி!

கோலியை விமர்சித்த ஜான்சனுக்கு நெட்டிசன்கள் பதிலடி!

மைதானத்தில் மிச்செல் ஜான்சன் & விராட் கோலி. (Cricket Australia)

மைதானத்தில் மிச்செல் ஜான்சன் & விராட் கோலி. (Cricket Australia)

Twitter Trashes Mitchell Johnson | பெர்த் டெஸ்டில் கோலியின் செயல்பாடு சிறுபிள்ளைதனமாக இருந்தது என்று மிச்செல் ஜான்சன் விமர்சித்தார்.

  • News18
  • Last Updated :
பெர்த் டெஸ்டில் கோலியின் செயல்பாடு குறித்து விமர்சித்துப் பேட்டியளித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜான்சனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

பெர்த்தில் நடந்த இந்தியா உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. போட்டியின்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் - இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

Kohli Tim Paine Clash
களத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - டிம் பெய்ன். (Twitter)


இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் மோதிக் கொள்ளும் காட்சிகளும் அரங்கேறின. அப்போது நடுவர் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினார். இந்த சம்பத்தில், தான் தரக்குறைவாக எதுவும் பேசவில்லை என விராட் கோலியும், போட்டி மனப்பான்மையோடு மோதிக் கொண்டோம் என டிம் பெய்னும் கூறியிருந்தனர்.



போட்டியின்போது மோதலில் ஈடுபட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மிச்செல் ஜான்சன் கூறுகையில், “போட்டி முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி, பார்த்து பாராட்டுவது வழக்கம். ஆனால், விராட் கோலியால் டிம் பெய்னை நேருக்குநேர் பார்த்து இதை செய்ய முடியவில்லை. இது மரியாதை குறைவான செயலம். பெர்த் டெஸ்டில் அவரது செயல்பாடு சிறுபிள்ளைதனமாக இருந்தது.” என்று விமர்சித்தார்.

கோலியை விமர்சித்துப் பேட்டியளித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜான்சனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.



இதற்கு முன்பு, போட்டியின்போது ஜான்சன் சண்டையிட்ட நிகழ்வுகளை ஒப்பிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.







Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: India vs Australia, Tim Paine, Virat Kohli

அடுத்த செய்தி