கோலி உருவத்தில் ஹேர் ஸ்டைல்! வைரலாகும் வெறிகொண்ட ரசிகரின் பின்னந்தலை புகைப்படம்

விராட் கோலி

 • Share this:
  விராட் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் கோலியின் உருவத்தில் ஹேர் டாட்டூ செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் முழுமையும் வட்டமடித்து வருகின்றது.

  சமீபத்தில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடரை விராட்கோலியின் ரசிகர் சிராக் க்ளாரே என்பவர் நேரில் கண்டு ரசித்தார். அப்போது தனது தலைமுடியை ஹேர் டாட்டூ செய்து மைதானத்திற்கு வந்த அவர் தனது பின்னந்தலையில் விராட்கோலியின் உருவம் போல் ஹேர் டாட்டூ செய்திருந்தார்.

  இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.  இது தொடர்பாக பிரபல செய்தி தொடர்பு நிறுவனமான ஏ.என்.ஐ-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனது ஹேர் டாட்டூவிற்கு 6-ல் இருந்து 8 மணி நேரம் வரை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

  மேலும் விராட்கோலியை சந்திப்பதே தனது கனவு எனவும் சந்தித்த பிறகு கட்டியணைத்து, பாதத்தை தொட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

  Also see:


   
  Published by:Sankaravadivoo G
  First published: