#AUSvIND கோலி, 3 ரன்னில் அவுட்... கவாஜாவின் கலக்கல் கேட்ச்! (வீடியோ)

#ViratKohli dismissed for 3 as #UsmanKhawaja | முதல் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வரிசையாக இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. #AUSvIND

news18
Updated: December 6, 2018, 12:28 PM IST
#AUSvIND கோலி, 3 ரன்னில் அவுட்... கவாஜாவின் கலக்கல் கேட்ச்! (வீடியோ)
விராட் கோலி & உஸ்மான் கவாஜா (Twitter)
news18
Updated: December 6, 2018, 12:28 PM IST
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்  வெறும் 3 ரன் எடுத்த விராட் கோலி, கல்லி திசையில் நின்றிருந்த கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியானது இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெற்றிருந்தார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.




தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே கே.எல். ராகுல் வெறும் 2 ரன்னிலும், 7-வது ஓவரில் முரளி விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா நிதானமாக விளையாட, பெரும் எதிர்பார்ப்புடன் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.
Loading...
போட்டியின் 11-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் விராட் கோலி அடித்த பந்தை கல்லி திசையில் நின்றிருந்த உஸ்மான் கவாஜா அட்டகாசமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். ‘கிங்’ கோலி 3 ரன்னிலேயே அவுட்டாகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.



பொறுப்புடன் விளையாடிய வேண்டிய கேப்டனே, இப்படி பொறுப்பற்ற முறையில் 3 ரன்னிலேயே ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்