Home /News /sports /

34 ஆண்டுகால உலக சாதனையைத் தகர்த்த மும்மூர்த்திகள்!

34 ஆண்டுகால உலக சாதனையைத் தகர்த்த மும்மூர்த்திகள்!

உலக சாதனை படைத்து இந்திய வேகக்கூட்டணி. (BCCI)

உலக சாதனை படைத்து இந்திய வேகக்கூட்டணி. (BCCI)

Indian Troika creates world record in 2018 | பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் கூட்டணி, 2018-ல் மட்டும் 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
டெஸ்ட் அரங்கில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி உலக சாதனை படைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் கூட்டணி, இதுவரை இல்லாத வகையில் வலிமையாக உள்ளது. நடப்பு ஆண்டில் டெஸ்ட் அரங்கில் சிறந்த வெற்றிகரமான கூட்டணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Jasprit Bumrah, Ishant Sharma, Mohammed Shami
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் விராட் கோலி. (AP)


பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் கூட்டணி, 2018-ல் மட்டும் 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு ஜாம்பவான்களான ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் மால்கம் மார்ஷல் கூட்டணி படைத்த சாதனையை இந்திய பந்துவீச்சாளர்கள் முறியடித்துள்ளனர்.

1984-ல் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 130 விக்கெட்டுகள் வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது. அடுத்த இடத்தில், தென்னாப்ரிக்காவின் மோர்னே மோர்கல், மகாயா நிடினி மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர் அடங்கிய வேகக்கூட்டணி உள்ளது. இந்தக் கூட்டணி, 2008-ல் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியது.

Bumrah, Indian Pacers
வலைப்பயிற்சியில் இந்திய வேகக்கூட்டணி. (BCCI)


பும்ரா, நடப்பாண்டில் 9 டெஸ்டில் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், 12 டெஸ்டில் விளையாடி முகமது ஷமியும் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இஷாந்த் சர்மா, 11 டெஸ்டில் விளையாடி 39 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Bumrah, பும்ரா
அறிமுக ஆண்டிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவை கைகளைத் தட்டி பாராட்டும் இந்திய வீரர்கள். (Twitter)


பும்ரா, மெல்போர்ன் டெஸ்டின் 3-ம் நாளில் 6 விக்கெட் வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். அத்துடன், நடப்பாண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பும்ரா சிறந்த அறிமுக வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: India vs Australia 2018, INDvAUS, Ishant sharma, Jasprit bumrah

அடுத்த செய்தி