Adelaide Test: ரோகித் சர்மாவா? ஹனுமா விஹாரியா? குழப்பத்தில் இந்திய தேர்வுக்குழு

Toss-up Between #RohitSharma and #HanumaVihari as India Test Squad | முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvAUS #AUSvIND

news18
Updated: December 5, 2018, 1:04 PM IST
Adelaide Test: ரோகித் சர்மாவா? ஹனுமா விஹாரியா? குழப்பத்தில் இந்திய தேர்வுக்குழு
ரோகித் சர்மா (BCCI)
news18
Updated: December 5, 2018, 1:04 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டர் வரிசையில் யாரை களமிறக்குவது என்ற குழப்பத்தில் 12 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (02.12.18) தொடங்குகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கான அணிகளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க இருக்கும் 11 பேர் கொண்ட சரியான அணியை அறிவித்துள்ளது. ஆனால், இந்தியா சார்பில் 12 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மிடில் ஆர்டர் வரிசையில் எந்த வீரரை களமிறக்குவது என்று குழப்பம்தான்.

Loading...
மிடில் ஆர்டரில் இறங்கப்போவது ரோகித் சர்மாவா? ஹனுமா விஹாரியா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ள ரோகித் சர்மாவை களமிறக்கலாம் என்று ஒரு சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதே நேரத்தில், பகுதிநேர பந்துவீச்சாளராக ஹனுமா விஹாரி பயன்படுவார் என்ற கோணத்தில் அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்றொரு ஆல்ரவுண்டரான ஜடேஜா, கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனது திறமையை நிரூபித்துள்ளதால், அவரை நீக்க வாய்ப்பில்லை. அதனால், நாளை போட்டியில் ரோகித் சர்மாவுக்கும், ஹனுமா விஹாரிக்கும் இடையே தான் டாஸ் போடப்பட உள்ளது.

Also Watch...

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்