ரோஹித் உள்ளே... தவான் வெளியே...? இன்று இறுதி ஒருநாள் போட்டி

India vs Australia |

ரோஹித் உள்ளே... தவான் வெளியே...? இன்று இறுதி ஒருநாள் போட்டி
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: January 19, 2020, 8:11 AM IST
  • Share this:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

உலக அரங்கில் வலுமிக்க அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் சமபலமிக்க அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

எனினும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் சுதாரித்த இந்தியா தான் பேட்டிங் ஜாம்பவான் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு நிரூபிக்கும் வகையில் 300 ரன்களுக்கும் அதிகமாக குவித்து வெற்றி பெற்றது.


இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது இறுதிப்போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் காயமடைந்த ரோகித் இப்போட்டியில் ஆடக்கூடும். எனினும் ஷிகர் தவன் ஆடுவது சந்தேகமே எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என இந்தியாவை தோற்கடித்தது. அதற்கு இந்தியா பழி தீர்க்க முனைப்பாக உள்ளது. அதனால் இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading