டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை தேர்வுக்கு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்த கே.எல். ராகுல் கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். இதையடுத்து ராகுலை டி20 போட்டிகளில் இருந்து நீக்கி தேர்வுக்குழு நடவடிக்கை மேற்கொண்டது.
இன்னொரு பக்கம், சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்கள் எளிதாக ரன்களை குவித்து வந்தனர். இதனால் ராகுல் மீதான நெருக்கடி அதிகரித்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ராகுலுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தன் மீதான விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் முதல் டெஸ்டில் 71 பந்துகளை சந்தித்த ராகுல் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 17 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் 1 ரன்னும் எடுத்தார்.
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கே.எல்.ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் இடம்பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த துணை கேப்டன் விபரம் யார் என்கிற விபரம் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் சில நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket