முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்…. சூர்ய குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்…. சூர்ய குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

ரிஷப் பந்த் விளையாடாத நிலையில், இஷன் கிஷன் மோசமான பார்மில் இருக்கும் சூழலில், விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்துக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி மைதானத்தில் நாளை ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் கடந்த சில மாதங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரிய குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் தனது 30-ஆவது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். கேப்டன் நல்ல ஃபார்மில் இருப்பதால் அணி வீரர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய அணிக்கு துணை கேப்டனாக கே.எல். ராகுல் செயல்படுகிறார். கடந்த சில மாதங்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாரா 3ஆவது இடத்தில் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. விராட்கோலி 4வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக அமையும். ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத நிலையில், சூரியகுமார் யாதவுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரன்களை குவித்துள்ள சூரியகுமார், டெஸ்ட் போட்டியிலும் ரசிகர்களை திருப்தி படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பந்த் விளையாடாத நிலையில், இஷன் கிஷன் மோசமான பார்மில் இருக்கும் சூழலில், விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்துக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். இதேபோன்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டியில் மிகப்பெரும் நெருக்கடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். டெஸ்ட் போட்டிகளில் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் அவரை விடவும் குல்தீப் யாதவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெஸ்ட்டில் மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெறுகிறார். இதே போன்று ஒரு நாள் போட்டிகளில் சர்வதேச அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பவுலர் முகமது சிராஜ். டெஸ்ட் போட்டியில் நாளை விளையாடுகிறார். வேகப்பந்து பந்துவீச்சு பிரிவில் சமி மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். இவற்றின் அடிப்படையில் நாளைய போட்டியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத்ரவிந்திரா ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ் ஆகிய 11 வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

First published:

Tags: Cricket