ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன், காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமையும் என்று சர்வதேச கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர், நாளை மறுதினம் நாக்பூரில் தொடங்குகிறது. சமீபத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய மன பலத்துடன் ஆஸ்திரேலிய அணி களத்தில் இறங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். இதனால் இந்த கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கேமரூனின் கிரீன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கிரீனுக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பயிற்சியிலும் கேமரூன் க்ரீன் கலந்து கொள்ளாத நிலையில், அவர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களத்தில் இறங்க உள்ளது. இந்தத் தொடருக்கான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், செதேஷ்வர் புஜாரா உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷாத், ஸ்டெவ் ஸ்மித், (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன் மற்றும் டேவிட் வார்னர்.
இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திரன் ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட் மற்றும் சூர்யகுமார் யாதவ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket