INDvsAUS T20 | நடராஜனுக்கு வாய்ப்பு... பும்ரா இந்திய அணியில் இடம்பெறாதது ஏன்?
India vs Australia T20 | இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20-ல் தனது முதல் போட்டியில் அவர் இன்று விளையாட உள்ளார்.

பும்ரா (கோப்பு படம்)
- News18 Tamil
- Last Updated: December 4, 2020, 2:40 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தமிழக வீரர் நடராஜன், சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேப் போன்று நட்சத்திர பவுலர் பும்ரா இன்று அணியில் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பீராவில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20-ல் தனது முதல் போட்டியில் அவர் இன்று விளையாடிகிறார். மேலும் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி : கே.எல்.ராகுல், ஷிகார் தவான், விராட் கோலி, சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், முகமது ஷமி, தங்கராசு நடராஜன்
இன்றையப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக இளம்வீரர்கள் மற்றும் சுழற்சி முறையில் மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அணயில் குறிப்பிட்ட வீரர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக விமர்சனம் எழுந்த வந்த நிலையில் ஐ.பி.எல் தொடரில் ஜொலித்த இளம்வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பீராவில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20-ல் தனது முதல் போட்டியில் அவர் இன்று விளையாடிகிறார். மேலும் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.