Home /News /sports /

டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட் - வரலாறு படைக்கக் காத்திருக்கும் இந்தியா

டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட் - வரலாறு படைக்கக் காத்திருக்கும் இந்தியா

சிட்னி மைதானம் (image: BCCI)

சிட்னி மைதானம் (image: BCCI)

இன்று நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. தொடர்ந்து சிட்னியில் மழை பெய்து வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் மழை காரணமாக தாமதமாகி வருகிறது. இந்த டெஸ்ட் டிரா ஆனாலும், இந்தியா தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது.

நேற்று 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. தொடர்ந்து சிட்னியில் மழை பெய்து வருகிறது.



தாமதமாக ஆட்டம் தொடங்கினாலும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், இந்த டெஸ்ட் போட்டி டிரா ஆகவே வாய்ப்புகள் அதிகம். இதனால், 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைக்க காத்திருக்கிறது.

Also See...

Published by:Sankar
First published:

Tags: India vs Australia 2018

அடுத்த செய்தி