Home /News /sports /

இரட்டை சதத்தை நோக்கி புஜாரா... ஆஸி. பவுலர்களை சோர்வடையச் செய்த இந்தியா...

இரட்டை சதத்தை நோக்கி புஜாரா... ஆஸி. பவுலர்களை சோர்வடையச் செய்த இந்தியா...

புஜாரா

புஜாரா

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களை குவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்து வரும் நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை குவித்தது. பொதுவாக ஆஸ்திரேலிய மண்ணில் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் நிலைத்து நின்று விளையாடி வருகின்றனர்.

Hazlewood, கே.எல்.ராகுல்
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸி. பந்துவீச்சாளர் ஹேசில்வுட். (AP)


ஏற்கனவே, ஒரு சதத்தை பதிவு செய்த புஜாரா, இந்த டெஸ்டிலும் சதமடித்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், விஹாரி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், புஜாரா நிதானமாக விளையாடி எதிரணி வீரர்களை சோர்வடையைச் செய்தார்.

150 ரன்களை கடந்த அவர் தற்போது 181 ரன்கள் எடுத்துள்ளார். பண்ட் 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி, உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களை குவித்துள்ளது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: India vs Australia 2018

அடுத்த செய்தி