Home /News /sports /

ரஹானேவை ‘போங்கு’ அவுட் செய்யப் பார்த்த ஆஸி.? - 15 விநாடிகள் அவகாசம் முடிந்த பிறகு டி.ஆர்.எஸ். அனுமதிக்கப்பட்டதா?

ரஹானேவை ‘போங்கு’ அவுட் செய்யப் பார்த்த ஆஸி.? - 15 விநாடிகள் அவகாசம் முடிந்த பிறகு டி.ஆர்.எஸ். அனுமதிக்கப்பட்டதா?

ரஹானேவின் அவுட் கோரும்போது 15 விநாடிகள் முடிந்து டிஆர்எஸ் அனுமதிக்கப்பட்டதா?

ரஹானேவின் அவுட் கோரும்போது 15 விநாடிகள் முடிந்து டிஆர்எஸ் அனுமதிக்கப்பட்டதா?

டிஆர்எஸ் முறையீடு கேட்க 15 விநாடிகள் கால அவகாசம் முடிந்து விட்டது போல்தான் தொலைக்காட்சியில் தெரிந்தது, அதன் பிறகே டிம் பெய்ன் ரிவியூ கேட்டது போல்தான் இருந்தது

அஜிங்கிய ரஹானேவை இன்று ஆஸ்திரேலிய அணியினர் ‘போங்கு’அவுட் செய்ய பார்த்தனர். டி.ஆர்.எஸ். மேல்முறையீடு செய்ய வழங்கப்படும் 15 விநாடிகள் அவகாசத்துக்குள் டிம் பெய்ன் முறையீடு செய்ததாகத் தெரியவில்லை.

சிட்னி என்றாலே 2008-ம் ஆண்டு கும்ப்ளே தலைமையில் சென்ற இந்திய அணி அனுபவித்த கொடுமையான நடுவர் மோசடிகள்தான் நினைவுக்கு வரும்.

கங்குலிக்கு ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங்கே அவுட் கொடுத்த கொடுமையும் நிகழ்ந்தது, நடுவர்கள் ஆஸி. கேப்டனின் கைப்பாவையாக மாறியிருந்தனர். ஆஸ்திரேலியாவுக்காக நடுவர்கள் கேட்ச்களை மட்டும்தான் பிடிக்கவில்லை.

ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு 9 அவுட் கொடுக்கப்படவில்லை. இந்திய அணியில் திராவிட், கங்குலி நாட் அவுட்டுக்கு அவுட் தரப்பட்டது, இதனால் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய போட்டி தோல்வியடைய நேரிட்டதோடு, ஹர்பஜன் சிங் ஏதோ சொன்னதை நிறவெறி என்று தவறாகப் புரிந்து கொண்டு அவர் மீது விசாரணை நடத்தி பயணம் செய்த மதிப்புக்குரிய இந்திய அணியை ஆஸ்திரேலியா அவமதித்தது என்றே கூற வேண்டும்.

குறிப்பாக எதிரணி கேப்டன்களை மனத்தளவில் நிலைகுலையச் செய்ய ஆஸ்திரேலிய அணியினர் எந்த விதமான மட்டரகமான முயற்சிகளையும் செய்வதில் வல்லவர் என்பது அவர்களது கிரிக்கெட்டை இயன் சாப்பல், கிரெக் சாப்பல், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சிகளில் மேற்கொண்ட அணுகுமுறைகளைக் கொண்டு எளிதில் நிறுவ முடியும்.

இந்நிலையில் இன்று சிட்னி டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் சுருண்டதில் கடும் அதிருப்தி அடைந்தது, இதில் லபுஷேன் 91, ஸ்மித் 131, அறிமுக தொடக்க வீரர் புகோவ்ஸ்கி 62. மொத்தம் 338 ரன்களில் 288 ரன்களை இவர்களே அடித்து விட்டனர். மூன்று பேர் டக் அவுட்.

அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா (26), ஷுப்மன் கில் (50) கண்களில் ஒற்றிக்கொள்ளும் சில ஷாட்களை ஆடினார்கள், அதிலும் ஷுப்மன் கில்லின் பேக்ஃபுட் பஞ்ச், புல்ஷாட்கள் பிரமாத ஸ்டைலிஷ் வீரர் அவர் என்பதை எடுத்துரைத்தது, அசாருதீனுக்குப் பிறகு அதே பாணியில் ஒரு வீரர் ஷுப்மன் கில்.

இருவரும் 70 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இதுவே ஆஸ்திரேலிய வீரர்களி வெறுப்படையச் செய்தது.

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆட்டமிழந்தவுடன் புஜாரா, ரஹானே இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதில் இன்னிங்ஸின் 40வது ஓவரை நேதன் லயன் வீசினார். ரஹானே முதல் 3 பந்துகளை தன்னம்பிக்கையுடன் தடுத்தாடினார். 4வது பந்து நன்றாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி ஓரளவுக்குத் திரும்பியது. முன் காலைத் தூக்கிப் போட்டு மட்டையை கால்காப்புக்குள் மறைத்துக் கொண்டு பந்தை கால்காப்பில் வாங்கினார் ரஹானே. ரஹானே ஷாட் ஆட முயற்சி செய்யவில்லை என்பதே பெரிய முறையீட்டுக்குக் காரணமானது.

நடுவர் நாட் அவுட் என்றார். ஆனால் டிஆர்எஸ் முறையீடு கேட்க 15 விநாடிகள் கால அவகாசம் முடிந்து விட்டது போல்தான் தொலைக்காட்சியில் தெரிந்தது, அதன் பிறகே டிம் பெய்ன் ரிவியூ கேட்டது போல்தான் இருந்தது, அது எப்படி அனுமதிக்கப்பட்டது என்ற சர்ச்சை ஒருபுறம். மறுபுறம் பந்து வெளியே பிட்ச் ஆகி வெளியே முடியும் பந்து ஸ்ட்ம்புக்கு அருகே செல்வது போல்தான் தெரிந்ததே தவிர பவுல்டு போல் தெரியவில்லை. இதைத்தான் மூன்றாவது நடுவரும் உறுதி செய்ய ரஹானே தப்பினார்.

ஆனால் 15 விநாடிகள் முடிந்த பிறகு டிம் பெய்ன் முறையீடு எப்படி அனுமதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. 3வது நடுவர் பப்ளிக் அட்ரஸ் சிஸ்டத்தில் இது தொடர்பாக பேசி நாட் அவுட் என்றார். இந்தியா ஆட்ட நேர முடிவில் 96/2 என்று உள்ளது, ரஹானே 5 ரன்களுடனும் புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Published by:Muthukumar
First published:

Tags: Ajinkya Rahane, India vs Australia, Rahane, Sydney

அடுத்த செய்தி