Home /News /sports /

சிட்னி டெஸ்ட்டுக்கு முன்னதாக ஆஸி. அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

சிட்னி டெஸ்ட்டுக்கு முன்னதாக ஆஸி. அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

India vs Australia

India vs Australia

2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து கடும் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய அணி ஆளாகியுள்ளதால், இந்திய அணியை வீழ்த்தும் நெருக்கடியோடு, தொடரை இழக்கும் வாய்ப்பையும் ஆஸ்திரேலியா தடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. 

  • 1 minute read
  • Last Updated :
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் 1-1 என்று சமன் ஆகியுள்ள நிலையிலும் இந்திய பேட்ஸ்மென்கள் மெல்ல ஆஸி. பந்துவீச்சை புரிந்து கொண்டு வருவதும் மாறாக ஆஸ்ட்ரேலிய பேட்டிங் சரிவுக்குச் செல்வதும் கவலையளித்துள்ள நிலையில் ஆஸி. அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் விலகியுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் வளரும் நட்சத்திர தொடக்க வீரர் வில் பியுகோவ்ஸ்கி சிட்னி டெஸ்ட் போட்டியில் தொடங்குகிறார், மார்கஸ் ஹாரிஸ் அணிக்கு வந்துள்ளார். அதே போல் ஷான் அபாட், மைக்கேல் நீசர், ஸ்வெப்சன் ஆகியோரும் அணிக்கு வந்துள்ளனர்.

    கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டின்ஸனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், 3-வது போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓய்வு நாட்களில் வீட்டு வேலை செய்யும்போது, வீ்ட்டில் தவறி விழுந்ததில் பேட்டின்ஸனுக்கு காயம் ஏற்பட்டது, இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விலகினார்.

    இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்புக் கிடைக்குமா, ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து கடும் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய அணி ஆளாகியுள்ளதால், இந்திய அணியை வீழ்த்தும் நெருக்கடியோடு, தொடரை இழக்கும் வாய்ப்பையும் ஆஸ்திரேலியா தடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

    ஆஸி. அணி வருமாறு:

    டிம் பெய்ன்(கேப்டன்),ஷான் அபாட், பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நீஸர், வில் பியுகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்ஸன், மாத்யூ வேட், டேவிட் வார்னர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs Australia, Sydney

    அடுத்த செய்தி