Home » News » Sports » CRICKET INDIA VS AUSTRALIA STUMPS DAY ONE INDIA SCORED 233 RUNS VJR

IND vs AUS | விராட் கோலி அரைசதம்... முதல் நாளில் இந்திய அணி 233 ரன்கள் சேர்ப்பு

India vs Australia | கேப்டன் விராட் கோலி 74 ரன்கள் எடுத்திருந்த போது ரஹானேவின் தேவையில்லாத சிங்கிள் அழைப்பால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

IND vs AUS | விராட் கோலி அரைசதம்... முதல் நாளில் இந்திய அணி 233 ரன்கள் சேர்ப்பு
India vs Australia
  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 233 ரன்கள் எடுத்துள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வென்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள் நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ப்ர்த்தீவ் ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினார்கள். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ப்ர்த்தீவ் ஷா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 17 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.


இதையடுத்து 3-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த புஜாரா - விராட் கோலி பொறுப்புடன் விளையாடினர். கேப்டன் விராட் கோலி டெஸ்ட்டில் தனது 22-வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் மிகவும் பொறுமையுடன் விளையாடிய புஜாரா 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கேப்டன் விராட் கோலி 74 ரன்கள் எடுத்திருந்த போது ரஹானேவின் தேவையில்லாத சிங்கிள் அழைப்பால் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதை தொடர்ந்து ரஹானே 42 ரன்னிலும், ஹனும விஹாரி 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. விருதுமான் சஹா 9 ரன்னுடனும், ரவிசந்திரன் அஸ்வின் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 2 விக்கெட்களும், ஹசில்வுட் கம்மின்ஸ், லயான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி உள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories