வரலாறு என்ன சொல்கிறது..? இந்தியா - ஆஸி. டெஸ்ட் கடந்து வந்த பாதை!

India vs Australia 2018: Statistical #Preview | ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். #AUSvIND #INDvIND

news18
Updated: December 5, 2018, 11:10 PM IST
வரலாறு என்ன சொல்கிறது..? இந்தியா - ஆஸி. டெஸ்ட் கடந்து வந்த பாதை!
டெஸ்ட் தொடருக்கான கோப்பை அறிமுகம் செய்த கோலி & டிம் பெய்ன் (BCCI)
news18
Updated: December 5, 2018, 11:10 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், கடந்த கால புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது என்பதை நினைவு கூறலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (02.12.18) தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு எப்போதும் கடும் சவால் மிகுந்ததாக இருக்கும். ஆனால், ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர் மோதிய தொடர்:

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணிகள், 1947-48 முதல் இதுவரை மொத்தம் 25 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. 8 தொடர்களில் இந்தியாவும், 12 தொடர்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவில் நடந்த 11 டெஸ்ட் தொடர்களில் ஒன்றைக் கூட இந்தியா கைப்பற்றியதில்லை. மூன்று முறை தொடரை சமன் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த 44 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 1977/78 மெல்போர்ன், 1977/78 சிட்னி, 1980/81 மெல்போர்ன், 2003/04 அடிலெய்ட் மற்றும் 2007/08 பெர்த் ஆகிய போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

India Vs Australia Table
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் வெற்றி விபரம்


சொந்த மண்ணில் ஆஸி. கில்லி:

சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. 72.12 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 57.61 சதவீதத்துடன் 4-வது இடத்தில் தான் இருக்கிறது. 2-வது இடத்தில் தென்னாஃப்ரிக்காவும் (61.46 %), 3-வது இடத்தில் இங்கிலாந்தும் (58.02 %) உள்ளது.

2018-ல் நடந்தது என்ன?

இந்திய அணி, நடப்பாண்டில் வெளிநாட்டுச் சென்ற விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களில் தென்னாஃப்ரிக்காவில் 1-2, இங்கிலாந்தில் 1-4 என தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 5-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

Indian Cricket Team
இந்திய கிரிக்கெட் அணி (BCCI)


ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, நடப்பாண்டின் தொடக்கத்தில் விளையாடிய தென்னாஃப்ரிக்காவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு இருக்கும் சாதகம்:

ஆஸ்திரேலிய மைதானங்களில் விராட் கோலிக்கு மிகவும் பிடித்தமானவை. ஏனென்றால், ஆஸ்திரேலிய மண்ணில் 5 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 992 ரன்களை கோலி விளாசியுள்ளார். அவரின் பேட்டிங் சராசரி 62. 2014-ல் மட்டும் 4 சதங்களுடன் 692 ரன்கள் விளாசினார். அப்போதைய பேட்டிங் சராசரி 86.50. ஒட்டுமொத்தமாக நடப்பாண்டில் 1000 ரன்களைக் கடந்து கோலி சாதனைப் படைத்தார். தென்னாஃப்ரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ‘ரன்மெஷின்’ கோலியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்த வாய்ப்பு குறைவுதான்.

விராட் கோலி | Virat kohli
விராட் கோலி (Twitter/BCCI)


இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருக்கு?

ஆஸ்திரேலிய அணியில், மிச்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் வேகக்கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவலாக இருக்கும். அதேபோல், இந்திய அணியின் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. 2018-ல் 197 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 132 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாக இது இருக்கிறது.மிரட்டும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன்!

2014-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன், இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். கடந்த முறை 23 விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் இந்தியாவுக்கு எதிராக 30 விக்கெட்டுகளை லியோன் கைப்பற்றியுள்ளார். ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சோபிக்க தவறினார். அவரைத் தவிர, ஜடேஜா மற்றும் குல்தீவ் யாதவ் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் விளையாடுவது அறிமுக தொடராகவே இருக்கும்.

Also Watch...

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்