ஸ்மித்தின் சதத்தை தடுத்து... ஆஸி.யின் வெற்றியைப் பறித்த சூப்பர் விக்கெட் - வீடியோ

ஸ்மித்தின் சதத்தை தடுத்து... ஆஸி.யின் வெற்றியைப் பறித்த சூப்பர் விக்கெட் - வீடியோ
News18
  • News18
  • Last Updated: January 17, 2020, 10:06 PM IST
  • Share this:
ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஸ்மித் 98 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 96 ரன்களும், கேப்டன் விராட் 78 ரன்களும், ராகுல் 80 ரன்களும் எடுத்தனர்.


341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவரில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஸ்மித் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய தரப்பில் ஷமி 3 விக்கெடுகளையும், சைனி, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெடுகளை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

ஆட்டத்தின் 38-வது ஓவரில் குல்தீப் பந்தில் ஸ்மித் அவுட் ஆனார். சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சூப்பராக குல்தீப் யாதவ் அவுட் செய்தார்.

நெருக்கடியான சூழலில் குல்தீப் யாதவ் எடுத்த இந்த முக்கிய விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி, இந்தியாவுக்கு வெற்றி வழியை ஏற்படுத்தியது.

Also Read: காரை விற்க மாட்டேன்... அடுத்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கவும் மாட்டேன்...! 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் சொல்கிறார்
First published: January 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading