ஆஸி.க்கு பதிலடி கொடுக்க இந்திய அணியில் முக்கிய மாற்றம்!

Ind vs Aus ODI: #Shami, #Kuldeep to return; #KLRahul to continue? | ஆஸ்திரேலியாவிடம் 11 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்தது இந்திய அணி.

ஆஸி.க்கு பதிலடி கொடுக்க இந்திய அணியில் முக்கிய மாற்றம்!
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
  • News18
  • Last Updated: March 1, 2019, 3:56 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் ஒரு நாள் போட்டிக்கான இந்திய லெவன் அணியில் சில மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் மீண்டு ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது.


Australia Team, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (ICC)


இதன்மூலம், ஆஸ்திரேலியாவிடம் 11 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடரை இழந்தது இந்திய அணி. விராட் கோலி கேப்டன்ஷியின் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை (மார்ச்.2) நடைபெற உள்ளது.

டி-20 தொடரியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு நாள் போட்டிக்கான இந்திய லெவன் அணியில் சில மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, தொடக்க வீரராக ஷிகர் தவான் உடன் கே.எல்.ராகுல் களமிறங்குவார்.
KL Rahul, கே.எல்.ராகுல்
ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசிய கே.எல்.ராகுல். (BCCI)


3-வது இடத்தில் வழக்கம் போல் கேப்டன் கோலி இருப்பார். 4-வது அல்லது 7-வது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கலாம். உலகக்கோப்பைக்கான 2-வது கீப்பர் என்ற அடிப்படையில் அவருக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்படலாம். 5-வது இடத்தில் மகேந்திர சிங் தோனி வருவார்.

தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தொடர்ந்து விளையாடலாம். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகிய இருவருக்கு வாய்ப்புள்ளது.

ஆனால், ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய இருவரும் டி-20 தொடரில் சரியாக விளையாடவில்லை.

Kedar Jadhav, MS Dhoni, மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ்
விக்கெட் வீழ்த்திய கேதர் ஜாதவை பாராட்டும் தோனி மற்றும் கோலி. (BCCI)


முகமது ஷமி அணிக்கு திரும்புவார். சித்தார் கவுலுக்கு சில வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆல்ரவுண்டர் தேவை இருந்தால் பும்ரா மட்டுமே இருப்பார். சுழற்பந்து வீச்சில் சஹாலுடன், குல்தீப் யாதவை களமிறக்க வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய ஒரு நாள் அணி: ஷிகர் தவான், கே.எல். ராகுல், விராட் கோலி, அம்பதி ராயுடு, ரிஷாப் பண்ட், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், பும்ரா, குல்தீப் யாதவ், சஹால்.

அபிநந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ரோகித்தை ஓராங்கட்டி சிக்சரில் சாதனை படைத்த தல தோனி!


Also Watch...

First published: March 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading