சிட்னி டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புத்தாண்டு தினம் என்று கூட பார்க்காமல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் (03.01.19) தொடங்குகிறது.

சிட்னி கிரிக்கெட் மைதானம். (Cricket Australia)
பெர்த் டெஸ்டில் விராட் கோலியும், அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் புஜாராவும் சதம் அடித்து அசத்தினர். ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த ஆஸி. வீரர் நாதன் லியோன். (Cricket Australia)
இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சிட்னி தொடரை இழக்காமல் குறைந்தபட்சம் டிரா செய்ய இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணி, சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.
4-வது டெஸ்ட் போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 14 பேர் கொண்ட அணியில் இருந்து 7 வீரர்கள் மட்டுமே பயிற்சிக்கு வந்திருந்தனர். சிட்னி டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புத்தாண்டு தினம் என்று கூட பார்க்காமல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.