• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலிக்கு சச்சின் சொன்ன ஸ்பெஷல் டிப்ஸ்!

கோலிக்கு சச்சின் சொன்ன ஸ்பெஷல் டிப்ஸ்!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி (கோப்புப்படம்)

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி (கோப்புப்படம்)

#SachinTendulkar has a special tip for #ViratKohli | இந்திய அணி பேட்டிங் செய்யும்போது முதல் 3 பேட்ஸ்மேன்கள் 30 ஓவர்களில் கவனமுடன் விளையாட வேண்டும் என்று சச்சின் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக கேப்டன் கோலிக்கு, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பா் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு யூகங்களை கூறி வருகின்றனர். பெரும்பாலானோர் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர். சிலர், ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மை குறித்து இந்திய அணிக்கு தெளிவு படுத்தியுள்ளனர்.

    Virat Kohli
    இந்திய கிரிக்கெட் அணி (கோப்புப்படம்)


    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதற்காக கேப்டன் கோலிக்கு, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார். “இந்திய அணி பேட்டிங் செய்யும்போது முதல் 3 பேட்ஸ்மேன்கள் 30 ஓவர்களைத் தாக்குப்பிடித்தால் போதும். அதன்பிறகு, நல்ல ரன்களை குவிக்க முடியும். புதிய பந்தாக இருந்தால் அதன் கடினத் தன்மையை இழக்க 30 ஓவர்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் பந்தை மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

    Virat Kohli
    கேப்டன் விராட் கோலி (BCCI)


    “ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. ஆனால், பேட்டிங் வலிமையாக இல்லை. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இல்லாமல் பேட்டிங் வலுவிழந்துள்ளது. இந்திய அணிக்கு இது பொன்னான வாய்ப்பாகவே கருதுகிறேன்” என்று சச்சின் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைக்கும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: