ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் கோலியா? சச்சினா? ஆஸி. கேப்டன் தேர்வு செய்தது யாரை தெரியுமா?

இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் கோலியா? சச்சினா? ஆஸி. கேப்டன் தேர்வு செய்தது யாரை தெரியுமா?

சச்சின் - விராட்கோலி

சச்சின் - விராட்கோலி

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். இலங்கை அணியைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. இதேபோன்று கடந்த சிலமாதங்களாக ஃபார்ம் இல்லாமல் தவித்த விராட் கோலி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை கையில் எடுத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரில்சதம் அடித்த கோலி, இலங்கை தொடரில் 2 சதங்கள் எடுத்து அசத்தினார். ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் 74 சர்வதேச சதங்களை கோலி எடுத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்100 சர்வதேச சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதேநேரம் உள்ளூரில் அதிக சதம் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறிடியத்துள்ளார். சச்சினின் சாதனைகளை விராட் கோலி ஒவ்வொன்றாக முறியடித்து வருவது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் 51 சதங்களை சச்சின் விளாசி முதலிடத்தில் இருக்கிறார். இந்த சாதனையை விரைவில் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸிடம் இந்திய அணியின் சிறந்த வீரர் சச்சினா அல்லது கோலியா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கம்மின்ஸ், , ‘சச்சினுடன் எனக்கு விளையாடிய அனுபவம் அதிகம் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளேன். என்னை பொருத்தவரையில் விராட் கோலி சிறந்த வீரர்’ என்று பதில் அளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

First published:

Tags: Cricket