ரன் அவுட் ஆன பிறகு பெருந்தன்மை: ரஹானேவுக்கும் கோலிக்கும் உள்ள வித்தியாசம்- ரசிகர்களின் இதயம் கவர்ந்த ரஹானே

ரன் அவுட் ஆன பிறகு பெருந்தன்மை: ரஹானேவுக்கும் கோலிக்கும் உள்ள வித்தியாசம்- ரசிகர்களின் இதயம் கவர்ந்த ரஹானே

ரஹானே-ஜடேஜா. |

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் தவறினால் கோலி ரன் அவுட் ஆனார், இன்று மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் தவறினால் சத நாயகன் ரஹானே ரன் அவுட் ஆனார்.

 • Share this:
  அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் தவறினால் கோலி ரன் அவுட் ஆனார், இன்று மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் தவறினால் சத நாயகன் ரஹானே ரன் அவுட் ஆனார்.

  ஆனால் விராட் கோலி கடும் கோபமடைந்தார், ரஹானே மாறாக ஜடேஜாவை அங்கேயே சமாதானப்படுத்தி, தொடர்ந்து சிறப்பாக ஆடு என்ற ரீதியில் நல்ல முறையில் அவரைப் பார்த்து செய்கை செய்தது நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  ரசிகர்கள் ரஹானேவின் பெருந்தன்மையை வெகுவாகப் பாராட்டி தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  ரஹானே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 112 ரன்கள் எடுத்து அற்புதமாக ஆடி வந்தார், அவரை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஆஸ்திரேலிய அணியினர் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் நிலையில் ஜடேஜா ஒரு பந்தை ஷார்ட் கவரில் தட்டி விட்டு விரைவு சிங்கிள் ஒன்றுக்கு ரஹானேவை அழைக்க லபுஷேன் த்ரோவை வாங்கி டிம் பெய்ன் அடிக்க, ரஹானேவின் பேட் கிரீசின் மேல் இருந்தது. ஆன் த கிரீஸ் அவுட். இதனையடுத்து ரன் அவுட் ஆனார் ரஹானே.

  ஆனால் ரன் அவுட் ஆனதால் கோபமடையாமல் பெவிலியன் செல்லும் போது ஜடேஜாவிடம் பரவாயில்லை நீ தொடர்ந்து நன்றாக ஆடு என்ற ரீதியில் செய்கை செய்து விட்டுப் போனார். இது ரசிகர்களின் இதயத்தை ரஹானேவின்பால் ஈர்த்துள்ளது.

  ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி ரஹானேவின் செய்கையை வெகுவாகப் பாராடி தன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட போது, “தலைமைத்துவம் என்பது செயலில் உள்ளது என்பதை மீண்டும் ரஹானே நிரூபித்தார். தன் ரன் அவுட்டுக்கு அவரது எதிர்வினை அணிக்கான உண்மையான வீரர் என்பதாக இருந்தது” என்று பாராட்டியுள்ளார்.

  ரசிகர்களும் ரஹானேவின் செய்கையைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். கேப்டனாக சச்சின், கோலிக்குப் பிறகு மெல்போர்னில் ரஹானே சதம் எடுத்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: