#AUSvIND முதல் டெஸ்ட்: ஆபத்பாண்டவன் புஜாரா அபார சதம்!

#Pujara Brings up his 16th Test ton | முதல் இன்னிங்சில் சதம் அடித்த புஜாரா டெஸ்ட் அரங்கில் 5000 ரன்களைக் கடந்தார். #AUSvIND #CheteshwarPujara

news18
Updated: December 6, 2018, 1:34 PM IST
#AUSvIND முதல் டெஸ்ட்: ஆபத்பாண்டவன் புஜாரா அபார சதம்!
சதமடித்த மகிழ்ச்சியில் புஜாரா (BCCI)
news18
Updated: December 6, 2018, 1:34 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்ட புஜாரா, சதம் அடித்து அசத்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் (2), முரளி விஜய் (11) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.

ஒன் டவுன் வீரராக களமிறங்கிய புஜாரா, ஆஸ்திரேலிய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டார். ஒரு முனையில் முன்னணி வீரர்கள் நடையைக்கட்ட மறுமுனையில் அனுபவ வீரரான புஜாரா இந்திய அணியின் தடுப்புச் சுவராக இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (3), ரகானே (13), ரோகித் சர்மா (37) ஆகியோர் ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இக்கட்டான சூழலிலும் எந்தவித பதற்றமும் இல்லாமல் பொறுமையாக விளையாடிய புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 16-வது சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன், டெஸ்ட் அரங்கில் 5000 ரன்களைக் கடந்தார். டெஸ்ட் அரங்கில் 5000 ரன்கள் என்ற மைல் கல்லைக் கடந்த 12-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார்.



வழக்கமாக, பேட்ஸ்மேன்கள் 90 ரன்கள் எடுத்துவிட்டால், 100-ஐ தொடுவதற்கு ஆமை வேகத்தில் ரன்னை சேகரிப்பார்கள். ஆனால், ஹேசில்வுட் வீசிய 84 ஓவரின் 5-வது பந்தில் அசால்டாக சிக்சரும், கடைசிப் பந்தில் பவுண்டரியும் விளாசினார். இந்திய அணியைச் சரிவில் இருந்துமீட்ட ஆபத்பாண்டவன் புஜாரா, 123 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி பரிதாபமாக வெளியேறினார்.



முதல் இன்னிங்சின் முதல் நாளில் சதமடித்த புஜாரா, ஆசிய கண்டத்திற்கு அப்பால் வெளிநாட்டு மண்ணில் முதல் நாளிலேயே சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் இணைந்தார்.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்