சிட்னியில் செடேஸ்வர் புஜாரா புதிய சாதனை: 11வது இந்திய வீரராக மைல்கல்

சிட்னியில் செடேஸ்வர் புஜாரா புதிய சாதனை: 11வது இந்திய வீரராக மைல்கல்

புஜாரா.

புஜாரா 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ஹேசில்வுட் பந்தில் பவுல்டு ஆனார். , இந்தியா 272/5என்று ஆடி வருகிறது.

 • Last Updated :
 • Share this:
  சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் 407 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

  புஜாரா முதல் இன்னிங்சில் அரைசதம் எடுத்ததோடு இந்த இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். அவர் 6,000 டெஸ்ட் ரன்களைக் கடந்த 11வது இந்திய டெஸ்ட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

  134 இன்னிங்ஸ்களில் புஜாரா இந்த மைல்கல்லை எட்டினார். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சேவாக், ராகுல் திராவிட் ஆகியோருடன் 6வது வீரராக வேகமாக 6000 டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் இணைந்தார்.

  லஷ்மண், கங்குலி, வெங்சர்க்கார், அசாருதீன், விஸ்வநாத் ஆகியோரும் 6,000 டெஸ்ட் ரன்களை எடுத்த மற்ற இந்திய டெஸ்ட் வீரர்களாவார்கள்.

  கவாஸ்கர் (117), கோலி, (119), சச்சின் (120), சேவாக், (123) திராவிட், (125) ஆகியோருடன் 134 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் மைல்கல்லை எட்டி புஜாரா புதிய சாதனையை நிகழ்த்தினார்.

  புஜாரா தற்போது 77 ரன்கள் எடுத்து சற்று முன் ஹேசில்வுட் பந்தில் பவுல்டு ஆனார். இந்திய அணி 272/5என்று ஆடி வருகிறது. அஸ்வின் இறங்கியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: