பிரித்வி ஷா பற்றி ரவிசாஸ்திரி சொன்ன புதிய அப்டேட்!

#PrithviShaw Likely To Return For 3rd Test | பிரித்வி ஷா, ஏற்கனவே நடைபயிற்சி தொடங்கிவிட்டார் என்று ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

news18
Updated: December 5, 2018, 3:47 PM IST
பிரித்வி ஷா பற்றி ரவிசாஸ்திரி சொன்ன புதிய அப்டேட்!
ரவி சாஸ்திரி & பிரித்வி ஷா
news18
Updated: December 5, 2018, 3:47 PM IST
பயிற்சி போட்டியின்போது காயமடைந்த பிரித்வி ஷா, மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புதிய அப்டேட்டை கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த இரு அணிகள் மோதிய சமனில் முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (05.12.18) அடிலெய்ட் மைதானத்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிக்கு முன்னோட்டமாக, ஆஸ்திரேலிய லெவன் மற்றும் இந்திய அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டங்கள் நடந்தன. அவற்றில் ஒரு போட்டியில் பவுண்டரி கோட்டிற்கு அருகில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த பிரித்வி ஷா கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது கணுக்கால் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 வார காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

Prithvi Shaw Injury
காயமடைந்த பிரித்வி ஷாவை தூக்கிச்சென்ற மருத்துவக்குழு (Twitter/BCCI)


அதன்படி, பெர்த் மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்க இருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி 2-வது டெஸ்டில் பிரித்வி ஷா பங்கேற்பது சந்தேகம் என்று கூறியுள்ளார். “பிரித்வி ஷா காயமடைந்தது இதயம் நொறுங்கக்கூடிய மோசமான நிகழ்வு. ஆனால், அவர் விரைவாக குணமடைந்து வருகிறார். இது மிகவும் நல்ல விஷயம்.” என்று தெரிவித்தார்.

“பிரித்வி ஷா, ஏற்கனவே நடைபயிற்சி தொடங்கிவிட்டார். இந்த வார இறுதியில் ரன் எடுக்க முடியுமா என்று சோதனை செய்ய வேண்டும். பெர்த் போட்டியின்போது அவர் அழைக்கப்படுவார்” என்று ரவிசாஸ்திரி கூறினார். அவரின் பேட்டியின் அடிப்படையில், பிரித்வி ஷா, 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Also watch...
Loading...
First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்