டவுசருடன் டாஸ் போட வந்த கோலி: நெட்டிசன்கள் ட்ரோல்!

Virat Kohli comes out for toss in shorts | ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். #IndiavsAustralia

டவுசருடன் டாஸ் போட வந்த கோலி: நெட்டிசன்கள் ட்ரோல்!
டாஸ் போடும் இந்தியா - ஆஸி. கேப்டன்கள் (BCCI)
  • News18
  • Last Updated: November 29, 2018, 2:29 PM IST
  • Share this:
இந்தியா - ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின்போது கேப்டன் விராட் கோலி குட்டையான கால் சட்டையுடன் டாஸ் போட வந்ததை கண்டித்து நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இந்தியா - ஆஸ்திரேலிய லெவன் அணிகள் மோதும் 4 நாட்கள் பயிற்சி போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் 3 நாட்களாக குறைந்தது. 2-வது நாள் ஆட்டத்தின் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 வீரர்களில் அரைசத்ததால், 358 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன், இரு அணிகளின் கேப்டனும் டாஸ் போட மைதானத்துக்கு வந்தனர். அப்போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, குட்டையான கால் சட்டையுடன் டாஸ் போட வந்தார். கோலியின் கால்சட்டை குறித்து நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

டாஸ் போடும்போது மைதானத்திற்கு கால் சட்டையுடன் வருவது அவமரியாதையான ஒன்று என்றும், இந்த நடத்தை முற்றிலும் மன்னிக்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Watch...

First published: November 29, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்