Home /News /sports /

Ind vs Aus | இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்?

Ind vs Aus | இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்?

இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா

இன்று நாக்பூரில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டியில் விராட் கோலிக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டும், உமேஷ் யாதவுக்குப் பதிலாக பும்ராவும் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Nagpur, India
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நாக்பூரில் நடைபெறும் டி20 போட்டியில்  இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 200 ரன்களை கடந்த போதும் ஃப்லிடிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பியதால் தோல்வியடைந்தது. புவனேஷ்வர் குமார் இறுதி ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். டெத் ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்து வருவதால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது.

பும்ரா முழு உடல்தகுதி பெற்றால்தான் உமேஷ் யாதவ்வை ரீப்ளேஸ் செய்ய முடியும். எப்படியாவது அவரை ஆட வைத்து இந்தப் போட்டியை எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற எதார்த்தமற்ற வெற்று முனைப்பு இருந்தால் பும்ராவை உடல் தகுதி இல்லாமல் ஆடவைத்து அவரது உலகக்கோப்பை வாய்ப்பையும் கெடுக்கக் கூடாது என்பதே ரசிகர்களின் வேண்டுகோள்.

மேலும் படிக்க : பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்த ஆண்டில் இந்தியா ஆடிய 27 டி20 போட்டிகளில் பும்ரா ஆடியது வெறும் 3 போட்டிகளில்தான். ஆட்களை மாற்றி பயனில்லை, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார் போன்றோரை இன்னும் கொஞ்சம் ஸ்டெப்-அப் செய்யச் சொல்ல வேண்டும்.

ரோஹித் சர்மா கேப்டன்சியையும் இம்ப்ரூவ் செய்ய வேண்டியுள்ளது, வைடு யார்க்கரை போடச்சொல்லி விட்டு, பாயிண்ட் பீல்டரையும் தேர்ட் மேன் பீல்டரையும் 30 அடி வட்டத்துக்குள் நிறுத்துவது படு அபத்தமான உத்தி. அதை செய்யக் கூடாது.

இந்திய லெவன் (உத்தேசம்): 1 ரோகித் சர்மா (கேப்டன்), 2 கேஎல் ராகுல், 3 விராட் கோலி, 4 சூர்யகுமார் யாதவ், 5 ஹர்திக் பாண்டியா, 6 தினேஷ் கார்த்திக் (வி.கே.), 7 அக்சர் படேல், 8 ஹர்ஷல் படேல், 9 புவனேஷ்வர் குமார், 10 ஜஸ்பிரித் பும்ரா/ உமேஷ் யாதவ், 11 யுஸ்வேந்திர சாஹல்/ஆர் அஸ்வின்.
Published by:Raj Kumar
First published:

Tags: Cricket, India vs Australia, Indian cricket team

அடுத்த செய்தி