முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸி.-க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பேட்ஸ்மேன்… ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸி.-க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பேட்ஸ்மேன்… ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய அணி

இந்திய அணி

ஏற்கனவே ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஒருவர் விலகியுள்ளளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டியை தொடர்ந்து, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகவுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சவாலாக இருக்கும் என்பதால் இந்த 3 ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் முதல் போட்டிக்கு மட்டும் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சர்வதேச ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இந்த தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷ்ரேயாஸ் அய்யர் விலகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அகமதாபாத் டெஸ்டில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயாஸிற்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது அவர் களத்தில் இறங்கவில்லை. அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் இடம்பெற மாட்டார் என்றே தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகும் வகையில் ஷ்ரேயாஸிற்கு ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம். ஏற்கனவே ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket