இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையிலான அணி முதல் 2 போட்டிகளில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்த 2 போட்டிகளும் 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.
இதையடுத்து சொந்த காரணங்களுக்காக கம்மின்ஸ் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் அணியின் கேப்டனாக 3 மற்றும் 4 ஆவது டெஸ்டில் செயல்பட்டார். 3 ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி போட்டியை டிரா செய்திருந்தது. இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்திருந்தாலும் கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் பாராட்டும் வகையில் இருந்தது.
டெஸ்ட் தொடரையடுத்து, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளியன்று மும்பையில் தொடங்குகிறது. கடைசி போட்டி மார்ச் 22 ஆம்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி வீரர்கள்- ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket