ஒருநாள் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்த கேப்டன்கள்!

India Vs Australia ODI Series Cup Unveiled | இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை (ஜன.12) இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது.

news18
Updated: January 11, 2019, 2:13 PM IST
ஒருநாள் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்த கேப்டன்கள்!
ஒருநாள் கோப்பையை அறிமுகம் செய்த கேப்டன்கள். (Cricket Australia)
news18
Updated: January 11, 2019, 2:13 PM IST
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் தொடருக்கான கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம் செய்து வைத்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian cricket team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. (Image: AP)


இதனை அடுத்து, இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. ஒருநாள் தொடருக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

Dhoni Practice, தோனி பேட்டிங் பயிற்சி
தொடர்ந்து 2-வது நாளாக தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
(BCCI)
Loading...
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான கோப்பையை இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளின் இரு கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ஆரோன் பிஞ்ச் கூட்டாக சேர்ந்து அறிமுகம் செய்து வைத்தனர்.

India Vs Australia, Virat Kohli, Finch, விராட் கோலி, பிஞ்ச்
ஒருநாள் தொடருக்கான கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம் செய்து வைத்தனர். (BCCI)


இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை (ஜன.12) இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது. 2-வது போட்டி அடிலெய்டில் ஜனவரி 15-ம் தேதி இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு நடைபெற உள்ளது.

3-வது மற்றும் கடைசிப் போட்டி, ஜனவரி 18-ம் தேதி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு நடைபெற உள்ளது.

#HappyBirthdayRahulDravid இந்திய அணியின் சுவருக்கு இன்று பிறந்தநாள்!

Also Watch...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...