ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சிட்னி டெஸ்ட் போட்டியில் டி.நடராஜன் ஆட வாய்ப்பு, மீண்டும் அணியில் ராகுல், ரோஹித் சர்மா

சிட்னி டெஸ்ட் போட்டியில் டி.நடராஜன் ஆட வாய்ப்பு, மீண்டும் அணியில் ராகுல், ரோஹித் சர்மா

தங்கராசு நடராஜன்

தங்கராசு நடராஜன்

உமேஷ் யாதவ் காயமடைந்ததால் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு அணியின் பவுலிங் பலத்துக்கு மேலும் வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் காயமடைந்ததால் டி20, ஒருநாள் தொடரில் அசத்திய தமிழக வீரர் டி.நடராஜனை சிட்னி டெஸ்ட் அணியிலும் தேர்வு செய்யலாம் என்று தெரிகிறது.

  சிட்னி டெஸ்ட் போட்டிக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மாவும் திரும்புவதால் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய தலைவலி காத்திருக்கிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலவீனங்களை முழுதும் இந்திய அணி அம்பலப்படுத்தியது. அஸ்வின், பும்ராவை ஆஸி. பேட்ஸ்மென்கள் ஆடுவதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.

  இந்நிலையில் உமேஷ் யாதவ் காயமடைந்ததால் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு அணியின் பவுலிங் பலத்துக்கு மேலும் வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  முகமது ஷமி காயமடைந்ததையடுத்து ஷர்துல் தாக்கூரை டெஸ்ட் அணியில் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் டி.நடராஜனுக்குத்தான் முதல் வாய்ப்பு என்று தெரிகிறது.

  இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிசிசிஐ வட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “தாக்கூர், சைனி இருக்கின்றனர், ஆனால் டி.நடராஜன் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம். பந்துவீச்சில் இன்னொரு புதிய வகையை அவர் மூலம் சேர்க்க ஆர்வமாக உள்ளனர். இடது கை வீச்சாளர் பந்து வீசும் போது ஏற்படுத்தும் காலடித்தடங்களைப் பயன்படுத்தி அஸ்வின் மேலும் ஆஸி. அணிக்கு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது, எனவே நடராஜனுக்கு பிரகாச வாய்ப்புள்ளது” என்றார்.

  அதே போல் ரோஹித் சர்மா அணிக்குள் வருவதால் மயங்க் அகர்வால் இடம் சிக்கல்தான். அதே போல் விஹாரிக்கு பதில் ராகுல் அணிக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

  மயங்க் அகர்வால் இருந்தால் என்றால் ரோஹித் 5ம் நிலையில் களமிறங்க வாய்ப்புள்ளது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricketer natarajan, T natarajan