VIDEO: பயிற்சியில் பட்டையைக் கிளப்பிய தோனி! 

#MSDhoni smashes bowlers in nets | இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி இன்று (பிப்.24) இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. #INDvAUS

VIDEO: பயிற்சியில் பட்டையைக் கிளப்பிய தோனி! 
பேட்டிங் பயிற்சியில் தோனி. (BCCI)
  • News18
  • Last Updated: February 24, 2019, 3:32 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியை முன்னிட்டு மகேந்திர சிங் தோனி அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி இன்று (பிப்.24) இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி 27-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மார்ச் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


India Vs Australia, Virat Kohli, Finch, விராட் கோலி, பிஞ்ச்
கோப்பையை அறிமுகம் செய்த கேப்டன்கள். (Cricket Australia)


ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னணி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் உள்ளிட்ட பலர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகைப்படங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் வெளியிட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். விக்கெட் கீப்பராக தொடர்ந்து ஜொலித்து வரும் மகேந்திர சிங் தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

உலகக் கோப்பை போட்டி குறித்து சக வீரர்களுக்கு விராட்கோலி எச்சரிக்கை!

Also Watch...

First published: February 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்