#AUSvIND: ஒரே ஒரு ரன்னில் தோனி செய்த சாதனை!

#MSDhoni joins 10,000-run club for India in ODIs | இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், விராட் கோலி ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். #AUSvIND #INDvAUS

news18
Updated: January 12, 2019, 3:05 PM IST
#AUSvIND: ஒரே ஒரு ரன்னில் தோனி செய்த சாதனை!
மகேந்திர சிங் தோனி. (ICC)
news18
Updated: January 12, 2019, 3:05 PM IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்து.

Khawaja, கவாஜா
இந்திய அணியின் பந்துவீச்சை விளாசிய கவாஜா. (Cricket Australia)


அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 4 ரன்களை எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. பின்னர், ரோகித் சர்மா - தோனி ஜோடி விக்கெட் இழப்பை தடுத்தது.

Rohit Sharma, Dhoni, ரோகித் சர்மா, தோனி
மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் தோனி. (Twitter)


5-வது வீரராக களமிறங்கிய தோனி, ஒரு ரன்னை எடுத்தபோது, சர்வதேச ஒரு நாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார். ஆசியக் கோப்பை போட்டியில் இருந்து தோனி எப்படியாவது 174 ரன்களை அடித்து ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆசியக் கோப்பை தொடரில் தோனியின் பேட்டிங் மோசமாக அமைந்திருந்தது. அடுத்து நடந்த, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், அவர் 10 ஆயிரம் ரன்களை எட்ட ஒரு ரன் குறைவாக இருந்தது.
Loading...
Dhoni, தோனி
மகேந்திர சிங் தோனி. (Twitter/ICC)


இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் தோனி முதல் ரன்னை எடுத்தபோது, 10 ஆயிரம் ரன்களை அவர் கடந்தார். இதன்மூலம், சர்வதேச அளவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 13-வது வீரர் மற்றும் இந்திய அளவில் 5-வது வீரர் என்ற பெருமைகளை தோனி பெற்றார்.

இதற்கு முன், இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், விராட் கோலி ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர்.

Also Watch...

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...