விமர்சனங்களுக்கு பேட்டால் பதில் சொன்ன தோனி!

#MSDhoni bags first ODI half-century | சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 68-வது அரைசதத்தைப் பதிவு செய்தார் தோனி. #AUSvIND #INDvAUS

news18
Updated: January 12, 2019, 3:43 PM IST
விமர்சனங்களுக்கு பேட்டால் பதில் சொன்ன தோனி!
சர்வதேச அரங்கில் 68-வது அரை சதத்தைப் பதிவு செய்த தோனி. (BCCI)
news18
Updated: January 12, 2019, 3:43 PM IST
கடந்த ஓராண்டாக வீசப்பட்ட விமர்சனப் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டு பேட்டால் ‘தல’ தோனி பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஓராண்டாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக, அவரது பேட்டிங் பார்ம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது.

Dhoni, தோனி
மகேந்திர சிங் தோனி. (Twitter/ICC)


விக்கெட் கீப்பராக தன்னை நிலைநிறுத்திய தோனியால், பேட்ஸ்மேனாக ஜொலிக்க முடியவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி 87 பந்துகளை சந்தித்து 65 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, தோனியால் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை.

2018-ம் ஆண்டு முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தோனி தடுமாறினார். அந்த ஆண்டில் அவரின் அதிகபட்ச ரன்கள் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்ததுதான். தோனியின் பேட்டிங் சராசரி 25.

MS Dhoni, தோனி
தோனி. (BCCI)


பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோனி களம் கண்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், மைதானத்தில் இறங்கி அவர், எதிரணி பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டார்.
Loading...
Dhoni, தோனி
மகேந்திர சிங் தோனி. (ICC)


சிட்னில் 96 பந்துகளை சந்தித்த அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது சர்வதேச ஒரு நாள் அரங்கில் அவரது 68-வது அரை சதமாகும். இதன்மூலம், கடந்த ஓராண்டாக வீசப்பட்ட விமர்சனப் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டு பேட்டால் ‘தல’ தோனி பதிலளித்துள்ளார்.

 Also Watch...
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...