ஜடேஜா அபார அரைசதம்; ரஹானே 112; 32 ரன்களில் 5 விக். இழப்பு - இந்தியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

ஜடேஜா அபார அரைசதம்; ரஹானே 112; 32 ரன்களில் 5 விக். இழப்பு - இந்தியா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

மெல்போர்ன் டெஸ்ட்டில் ஜடேஜ அரைசதம்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இந்திய அணி கடைசி 5 விக்கெட்டுகளை 32 ரன்களுக்கு இழந்து 326 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 131 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

 • Share this:
  மெல்போர்னில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று உணவு இடைவேளைக்குச் சற்றுமுன் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

  இதன் மூலம் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 131 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது. இந்தியா 100 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்று ஒரேஒருமுறைதான் தோற்றுள்ளது, அது 2015ம் ஆண்டு இலங்கை காலே டெஸ்ட் போட்டியாகும்.

  பிட்சில் பந்துகள் முதல் நாள் போல் வேகமாக வரவில்லை. பும்ரா, அஸ்வின் கையில்தான் உள்ளது. முதல் இன்னிங்ஸ் போல் சுருட்ட முடியாவிட்டாலும் 250 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை மடித்து விட்டால் ‘தேறுமா’ இந்தியா? தேறவே தேறாது என்றெல்லாம் கூறிய மார்க் வாஹ், பிராட் ஹேடின் போன்றோருக்குத் தக்க பதிலடி கொடுத்த வெற்றியாக அமையும்.

  பின் வரிசை வீரர்களுக்கு, ஜடேஜாவுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை வீசினர். இதில் ஒன்றில்தான் ஜடேஜா பெவிலியனுக்கு எகிறினார்.

  பிட்சில் ஒன்றுமில்லை ரஹானே தனது அபாரமான கேப்டன் இன்னிங்ஸுக்குப் பிறகு 112 ரன்களில் விரைவு சிங்கிள் எடுக்கும் முயற்சியில் ரன் அவுட் ஆனார். மட்டை கிரீசின் மேல் இருந்தது, ஆன் த கிரீஸ் அவுட்.

  ஜடேஜா ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனாக 2018லிருந்தே பரிணாமம் அடைந்து வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடி வந்த கோலியை ரஹானே ரன் அவுட் செய்தார். இந்த முறை கேப்டன் ரஹானேவை ஜடேஜா இழுத்து விட்டார், ஆனால் இதில் ரஹானே ஒப்புக் கொண்டு ஆடினார், அதில் ரஹானே ஓடி விட்டு நின்று விட்டார். ரஹானே தன் அபார இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளை அடித்து 112 ரன்களில் வெளியேறினார்.

  ரஹானே ரன் அவுட் ஆனதையும் சேர்த்து கடைசி 5 விக்கெட்டுகளை இந்திய அணி 32 ரன்களில் இழந்து 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுன்சர்களாக வீசித்தள்ளினார் ஸ்டார்க், அப்படிப்பட்ட ஒரு பந்தில்தான் கடைசியில் கமின்ஸிடம் கேட்ச் ஆனார். ஜடேஜா 159 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். அஸ்வின் 14 ரன்களில் ஹேசில்வுட்டிடம் காலியானார்.

  உமேஷ் யாதவ் (9), பும்ரா இருவரும் லயனிடம் வீழ்ந்தனர். ஆஸி.தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்தியா 115.1 ஓவர்கள் ஆடி 326 ரன்களுக்கு சுருண்டது.
  Published by:Muthukumar
  First published: