ICC WORLD CUP 2019: இன்று ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதல்

ICC WORLD CUP 2019: இன்று ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதல்
இந்தியா - ஆஸ்திரேலியா
  • Share this:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 14வது போட்டியில் இன்று இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற உற்சாகத்தில் இந்தியா களம் இறங்குகிறது. கடந்த போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா தவிர தோனி, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோரும் இன்றைய போட்டியில் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சகால், குல்தீப் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு இந்தியாவிற்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியில் பின்ச், வார்னர், மேக்ஸ்வெல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.


போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா இரண்டாவது வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் நேரடி ஒளிபரப்பில் காணலாம். ஜியோ டிவி மூலமும் போட்டியை பார்க்கலாம்.

JIO OFFER: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண அதிரடி சலுகைகளை அறிவித்த ஜியோ!
First published: June 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading