Home /News /sports /

India Vs Australia | ஆஸி.க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

India Vs Australia | ஆஸி.க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

News18

News18

India Vs Australia | Live Score

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 96 ரன்களும், கேப்டன் விராட் 78 ரன்களும், ராகுல் 80 ரன்களும் எடுத்தனர்.

    341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவரில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஸ்மித் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்திய தரப்பில் ஷமி 3 விக்கெடுகளையும், சைனி, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெடுகளை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

     
    Published by:Sankar
    First published:

    Tags: India vs Australia

    அடுத்த செய்தி