Home /News /sports /

சிட்னி டெஸ்ட்: 300-க்கு ஆஸி. ஆல்அவுட்.. வெளிச்சமில்லாததால் 4-ம் நாள் ஆட்டம் விரைவில் முடிந்தது!

சிட்னி டெஸ்ட்: 300-க்கு ஆஸி. ஆல்அவுட்.. வெளிச்சமில்லாததால் 4-ம் நாள் ஆட்டம் விரைவில் முடிந்தது!

ஆஸி. அணியை வென்ற மகிழ்ச்சியில் கோலி & கோ. (BCCI)

ஆஸி. அணியை வென்ற மகிழ்ச்சியில் கோலி & கோ. (BCCI)

#SydneyTest: Bad Light Forces Early Stumps | ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #AUSvIND

  • News18
  • Last Updated :
    சிட்னி டெஸ்டின் 4-ம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்றி பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது.

    Virat Kolhi, இந்திய அணி
    களத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI )


    3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சால், முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    குல்தீப் யாதவ், Kuldeep Yadav
    ஆஸி. வீரர் கவாஜா விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ். (BCCI)


    இதனை அடுத்து, ஆஸ்திரேலிய அணி இந்திய அணி அடித்த ரன்களில் பாதியளவு கூட ஆஸ்திரேலியா அடிக்காததால், ‘பாலோ-ஆன்’ வழங்கப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி, 6 எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்றி தேநீர் இடைவேளை விரைவாக கொடுக்கப்பட்டது.

    SCG, சிட்னி
    சிட்னி டெஸ்ட்: போதிய வெளிச்சமில்லாமல் ஆட்டம் பாதிப்பு. (BCCI)


    தொடர்ந்து காலநிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், 4-ம் நாள் ஆட்டம் விரைவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால், இந்த டெஸ்ட் போட்டி டிரா ஆகவே வாய்ப்புகள் அதிகம். இதனால், 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைக்க காத்திருக்கிறது.

    டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட் - வரலாறு படைக்கக் காத்திருக்கும் இந்தியா


    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Ind Vs Aus, India vs Australia, Kuldeep Yadav

    அடுத்த செய்தி