கவாஜா அபார சதம்.. இமாலய இலக்கை குறிவைக்கும் ஆஸி.!

#IndvAus, 5th ODI at Delhi: Australia Dominate | இந்திய அணியைப் பொறுத்தவரை, 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கவாஜா அபார சதம்.. இமாலய இலக்கை குறிவைக்கும் ஆஸி.!
சதம் அடித்த கவாஜா. (BCCI)
  • News18
  • Last Updated: March 13, 2019, 3:57 PM IST
  • Share this:
இந்தியா உடனான கடைசிப் போட்டியில் கவாஜாவின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை குறிவைக்கிறது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


India XI
இந்திய லெவன் அணி. (BCCI)


தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கவாஜா களமிறங்கினர். பொறுமையாக விளையாடிய பிஞ்ச் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பீட்டர் ஹெண்ட்ஸ்கோம்ப், கவாஜா உடன் ஜோடி சேர்ந்து நல்ல அடித்தளம் கொடுத்தார்.

நிதானமாக விளையாடிய கவாஜா சதம் அடித்து அசத்தினார். 32 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கடைசிப் போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயிக்க ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது.Also Watch...

First published: March 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading